


கோலாலம்பூர் ஆக 25-
கூட்டரசு பிரதேச மாநிலத்தில் இயங்கும் ஒரே பெண்கள் ஆரம்ப தமிழ்ப் பள்ளியாக செந்தூல் செயின்ட் ஜோசப் தமிழ்ப் பள்ளி விளங்குகிறது.
நாட்டில் பழமை வாய்ந்த தமிழ்ப் பள்ளியாகவும் வலம் வருகிறது.
இந்த பள்ளியின் 66 ஆம் ஆண்டு விளையாட்டு போட்டி மற்றும் தடகள போட்டி கடந்த ஞாயிற்றுக்கிழமை ஸ்தாப்பாக் ஸ்கை அரினாவில் மிகப்பெரிய அளவில் நடைபெற்றது.
போட்டியில் கலந்து கொண்ட மாணவிகளுக்கு ஆதரவு தெரிவிக்க ஏராளமான பெற்றோர்கள் வருகை தந்தனர்.
நாட்டில் புகழ்பெற்ற Blues Brother Welfare Association Malaysia இயக்கத்தின் இளைஞர் அணி தலைவர் மற்றும் விளையாட்டு பிரிவு தலைவர் டத்தோ டாக்டர் எம் சங்கர் சிறப்பு வருகை தந்து போட்டியை அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார்.
மேலும் Blues Brother Welfare Association Malaysia சார்பில் டத்தோ டாக்டர் எம் சங்கர் 10,000 வெள்ளி மானியமும் வழங்கி பேருதவி புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ்ப் பள்ளி மாணவர்கள் விளையாட்டு போட்டிகளில் சிறந்து விளங்குகிறது மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
தமிழ்ப் பள்ளி மாணவர்களின் கல்வி மேம்பாடு மற்றும் விளையாட்டு துறைக்கு சமூக இயக்கங்கள் தொடர்ந்து ஆதரவு வழங்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

