மூன்று குற்றச்சாட்டுகளை மறுத்து விசாரணை கோரினார் டத்தோஸ்ரீ எம் சரவணன்!

கோலாலம்பூர், ஆக.28-
முன்னாள் மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன் மீது கோலாலம்பூர் நீதிமன்றத்தில் மூன்று குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டது

2022ஆம் ஆண்டு ஒரு நிறுவனத்துக்கு வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஒதுக்கீட்டை (கோட்டா) அங்கீகரித்ததற்காக, வெ.1 மில்லியனுக்கும் அதிகமான லஞ்சத்தைப் பெற்றதாக சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுக்கள் அவர் மீது கொண்டு வரப்பட்டது.

மூன்று குற்றச்சாட்டுக்களை மறுத்து
விசாரணை கோரிய அவர் இதை எதிர்த்து போராட போவதாக தெரிவித்தார்.

மஇகாவின் தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ சரவணன், TYKB Engineering Sdn Bhd நிறுவனத்தின் வெளிநாட்டுத் தொழிலாளர் கோட்டா விண்ணப்பத்தை அங்கீகரிப்பதற்கான தூண்டுதலாக, மூன்று தனித்தனி கொடுப்பனவுகள் மூலம் மொத்தம் வெ.1,097,000 பெற்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

சம்மந்தப்பட்ட நிறுவனம் 1,000 வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான கோட்டாவைப் பெற விண்ணப்பித்திருந்தது.

தம் மீது சுமத்தப்பட்டுள்ள மூன்று குற்றச்சாட்டுகளையும் சரவணன் மறுத்ததுடன், அவை தொடர்பான வழக்கை நீதிமன்றத்தில் முழுமையாக எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகக் கூறி விசாரணை கோரினார்.

அவர் மீது MACC சட்டம் 2009-இன் 16(a)(B) பிரிவின் கீழ் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இவ்வழக்கு நீதிபதி அசுரா அல்வி முன்னிலையில் விசாரணைக்கு வருகிறது

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles