
இந்நாட்டில் இந்திய பாரம்பரிய தொழில் துறைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனை தொடர்பில் உள்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சைபுடின் நசுத்தியோனுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.
முடித்திருத்தும் நிலையங்கள், டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள் இப்போது கடுமையான அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனையை எதிர் நோக்கி இருக்கிறது என்பதை நான் அறிவேன்.
இது இன்றைய நேற்றைய பிரச்சனைகள் அல்ல. கடந்த பல ஆண்டுகளாக இந்த பிரச்சனை நீடிக்கிறது.
பல துறைகளில் அந்நிய தொழிலாளர்கள் வேலை செய்வதற்கு அரசு அனுமதி வழங்கி உள்ளது.
அந்த வகையில் முடித்திருத்தும் நிலையங்கள் டெக்ஸ்டைல்ஸ் மற்றும் நகைக்கடைகள் எதிர் நோக்கி இருக்கும் அந்நிய தொழிலாளர்கள் பிரச்சனைக்கு தீர்வு காண போராடி வருகிறேன் என்று அவர் தெரிவித்தார்.
உள்துறை அமைச்சு தவிர்த்து உள்நாட்டு வர்த்தக மற்றும் வாழ்க்கை செலவினத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ சாலாவூடின் ஆயோப் ஆகியோரூடன் பேச்சுவார்த்தை நடத்தி கொண்டிருப்பதாக அவர் சொன்னார்.
தீவேட் தொழில் திறன் பயிற்சி திட்டத்தில்
பத்து ஜிஎல்சி நிறுவனங்களுடன்
புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு இன்று ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள தொழில் திறன் கல்லூரியில் நடைபெற்றது.
துணை பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட் ஹமிடி முன்னிலையில் மனித வள அமைச்சர் சிவகுமார் பத்து ஜிஎல்சி நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.
அதன் பின்னர் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் இவ்வாறு பதில் அளித்தார்.

