


கோலாலம்பூர் ஆக 7-
நாட்டிலேயே முதல் முறையாக பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற தொகுதியில் 60 பேருக்கு கெமுனிட்டி மடானி சான்றிதழ் வழங்கப்பட்டது.
பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பண்டார் துன் ரசாக் கெஅடிலான் தொகுதி தலைவர் டத்தோ அஸ்மான் கலந்து சிறப்பித்தார்.
பண்டார் துன் ரசாக் கெஅடிலான் உதவி தலைவர் மற்றும் தொகுதியின் கெமுனிட்டி மடானி தலைவர் ஜொனாதன் வேலா சிறப்புரையாற்றினார்.
பின்னர் 60 பேருக்கு கெமுனிட்டி மடானி சான்றிதழை டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வழங்கினார்.
சமூக தலைவர்களை போல் இந்த 60 பேரும் மக்களை நேரில் சந்தித்து அவர்களின் குறைகளை கேட்டறிவார்கள்.
அதன் மூலம் மக்கள் எதிர் நோக்கி இருக்கும் பிரச்சனைகளை தீர்வு காண உதவும் என்று ஜொனாதன் வேலா நம்பிக்கை தெரிவித்தார்.
மலேசியாவில் ஒரு நாடாளுமன்ற தொகுதியில் கெமுனிட்டி மடானியாக 60 பேர் நியமனம் செய்யப்பட்டது இதுவே முதல் முறையாகும் என்று அவர் சொன்னார்.

