உயர்கல்விக்கூடங்களில் பயிலும் 500 இந்திய மாணவர்களுக்கு சிலாங்கூர் அரசின் 20 லட்சம் வெள்ளி நிதியுதவி

உயர் கல்விக்கூடங்கள் மற்றும் கல்லூரிகளில் பயிலும் சிலாங்கூர் மாநிலத்தைச் சேர்ந்த 500 இந்திய மாணவர்களுக்கு மிக விரைவில் 20 லட்சம் வெள்ளி கல்வி நிதி வழங்கப்பட இருப்பதாக சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் வீ கணபதி ராவ் தெரிவித்தார்.

கடந்த 2014 ஆம் ஆண்டில் முதல் முறையாக 14 மாணவர்களுக்கு கல்வி நிதியை கொடுக்கும் திட்டத்தை ஆரம்பித்தோம்.

இப்போது ஒவ்வொரு ஆண்டிலும் ஏராளமான இந்திய மாணவர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசு கல்வி நிதியை வழங்கிக் கொண்டிருக்கிறது.

அந்த வகையில் இவ்வாண்டில் 500 இந்திய மாணவர்களுக்கு மிக விரைவில் 20 லட்சம் வெள்ளிக்கு மேல் கல்வி நிதி வழங்கப்பட இருப்பதாக அவர் சொன்னார்.

இதனிடையே சிலாங்கூர் ஐ சிட் திட்டத்தில் உதவி பெற்ற 100 இந்தியர்கள் இலவசமாக மூன்று தினங்கள் கிள்ளான் பாடாங் செட்டியில் வியாபாரம் செய்ய சிலாங்கூர் மாநில அரசு இலவசமாக கடைகளை வழங்கியிருப்பதாக அவர் சொன்னார்.

தீபாவளியை முன்னிட்டு இந்தியர்கள் வியாபாரம் செய்ய இலவசமாக கடைகளை வழங்கிய முதல் மாநில அரசாங்கமாக சிலாங்கூர் பக்கத்தான் ஹரப்பான் அரசு விளங்குகிறது என்று கணபதி ராவ் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles