
வெறும் 10 வெள்ளியில் 111 கலிடோனியா தோட்டப் பாட்டாளிகளுக்கு
தரை வீடுகளை தீபாவளி பரிசாக வழங்கி சாதனை படைத்தது
பினாங்கு பக்கத்தான் அரசாங்கம்
பினாங்கு மாநில துணை முதல்வர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி மேற்கொண்ட முயற்சியால் நிபோங் திபால் கலிடோனியாவைச் சேர்ந்த 111 தோட்டப் பள்ளிகளுக்கு அழகான தரை வீடுகள் இன்று வழங்கப்பட்டன.
இன்னும் இரண்டு வாரத்தில் தித்திக்கும் தீபாவளி பண்டிகையை கொண்டாடவிருக்கும் கலிடோனியா தோட்டப் பாட்டாளிகள் தங்களுக்கு தரை வீடுகள் கிடைத்ததால் பெரும் மகிழ்ச்சியில் திளைத்தனர்.
இந்த வீட்டின் விலை வெறும் 10 வெள்ளி மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
கலிடோனியா தோட்ட பாட்டாளிகளுக்கு வெறும் பத்து வெள்ளியில் சொந்த தரை வீடுகளை கட்டிக்கொடுத்து சாதனை படைத்த அரசாங்கமாக பினாங்கு மாநிலம் விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

பேராசிரியர் டாக்டர் ராமசாமி மேற்கொண்ட முயற்சி இன்று வெற்றி பெற்றுள்ளது.
இன்று கலிடோனியா தோட்டத்தைச் சேர்ந்த 111 தோட்ட பாட்டாளிகளுக்கு வீட்டுக்கான சாவிகள் ஒப்படைக்கும் நிகழ்ச்சி விமர்சையாக நடைபெற்றது.
வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இந்த விழாவில் பினாங்கு மாநில முதல்வர் Chow kon yeow, துணை தலைவர் பேராசிரியர் டாக்டர் பி இராமசாமி, ஆட்சிக்குழு உறுப்பினர் ஜக்டிப் சிங், செபராங் பிறை மாநகர் மாவட்ட கவுன்சிலர் டேவிட் மார்ஷல், டத்தோஸ்ரீ சுந்தரராஜூ, டத்தோ செளந்தரராஜன், கிருஷ்ணசாமி உடபட பல முக்கிய பிரமுகர்கள் கலந்து சிறப்பித்தனர்.
இந்த வீடுகளை கட்டும் பணிகளை தமிழ் நெஞ்சரும் எக்கோ வோர்ல்டு நிறுவனத்தின் தலைமை நிர்வாக இயக்குனர் டத்தோஸ்ரீ ராஜூ தலைமையிலான எக்கோ வோர்ல்டு நிறுவனம் மேற்கொண்டது.
வாக்குறுதி கொடுத்தபடி இரண்டே ஆண்டுகளில் இந்த வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு கலிடோனிய தோட்ட பாட்டாளிகளிடம் ஒப்படைத்து இருக்கிறோம் என்று டாக்டர் இராமசாமி குறிப்பிட்டுள்ளார்.
இதனிடையே பத்து வெள்ளியில் அழகான தலைவர்களை பெற்றுக் கொண்ட கலிடோனியா தோட்ட பாட்டாளிகள் டாக்டர் இராமசாமி மற்றும் பினாங்கு மாநில பக்கத்தான் ஹரப்பான் அரசாங்கத்துக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டனர்

