
வரும் திங்கட்கிழமை ம இகாவின் 76 ஆம் ஆண்டு பொதுப் பேரவை ஜாலான் டுத்தாவில் உள்ள மைடெக் எனப்படும் மலேசியா அனைத்துலக வர்த்தக கண்காட்சி மண்டபத்தில் நடைபெறுகிறது.
ம இகா தேசிய தலைவர் டான்ஸ்ரீ எஸ்.ஏ. விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெறும் இந்த பேரவையில் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் உட்பட தேசிய முன்னணி தலைவர்கள் கலந்து கொள்கிறார்கள்.
பொதுத் தேர்தல் நெருங்கி இருக்கும் நேரத்தில் ம இகா பொதுப் பேரவை அனைவரின் பார்வையை பெரிதும் கவர்ந்துள்ளது.
12 நாடாளுமன்ற தொகுதியில் போட்டியிட மஇகா விருப்பம் தெரிவித்துள்ளது. இது கனவாகுமா என்பது இந்த மாநாட்டில் தெரிய வரலாம்.

