37,230 வெள்ளி பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு வெறும் 12 கோடியே 50 லட்சம் வெள்ளி தானா? பாடாங் செராய் எம்.பி. கருப்பையா கேள்வி

நேற்று நாடாளுமன்றத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான
3,720 கோடி வெள்ளி மதிப்புள்ள பட்ஜெட்டை நிதி அமைச்சர் தெங்கு ஷப்ரூல் தாக்கல் செய்தார்.

இந்த பட்ஜெட்டில் மித்ராவுக்கு பத்து கோடி வெள்ளியும் மைக்ரோ கடனுதவி திட்டத்திற்கு 2 கோடியே 50 லட்சம் வெள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது.

தமிழ்ப்பள்ளிகளுக்கு எவ்வளவு ஒதுக்கப்பட்டது என்பது அறிவிக்கப்படவில்லை.

37,230 கோடி வெள்ளி மதிப்புள்ள பட்ஜெட்டில் இந்தியர்களுக்கு வெறும் 12 கோடியே 50 லட்சம் வெள்ளி மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது ஏமாற்றமாகும் என்று பாடாங் செராய் நாடாளுமன்ற உறுப்பினர் கருப்பையா தெரிவித்தார்.

இந்த புதிய பட்ஜெட்டில் இந்திய சமுதாயம் நன்மை அடையும் வகையில் எந்தவொரு கூடுதல் மானியமும் ஒதுக்கப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டினார்.

இதனிடையே நோய் தொற்றிலிருந்து மீண்டு வரும் இந்திய தொழில் முனைவர்களுக்கு உதவ இந்த பட்ஜெட்டில் தீவிர கவனம் செலுத்தப்படவில்லை என்று கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்ல்ஸ் சந்தியாகோ சுட்டி காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles