கோர்ட்டுமலை ஆலயத்தில் விநயாகர் சதுர்த்தி கொண்டாட்டம்: 2,000 பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினார் டத்தோஸ்ரீ ஜெயந்திரன்!

கோலாலம்பூர்,செப்.14=

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு நாடு முழுவதும் உள்ள பிள்ளையார் ஆலயங்களில் சதுர்த்தி விழா விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அவ்வகையில் கோர்ட்டுமலை ஸ்ரீ கணேசர் ஆலயத்தில் விநாயகர் சதுர்த்தி விழா சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது.பிரமாண்ட கும்பாபிஷேக விழாவிற்கு பின் முதல் விநாயகர் சதுர்த்தி விழாவாக இது அமைந்துள்ளது.

இந்நிலையில் கோர்ட்டுமலை விநாயகர் சதுர்த்தி விழாவிற்கு வரும் பக்தர்களுக்காக பிரபல தொழிலதிபர் டத்தோஸ்ரீ ஜெயந்திரன் அன்னதானம் வழங்கினார்.

11ஆவது ஆண்டாக 2,000 பேருக்கு இவ்வாண்டு அன்னதானம் வழங்கப்படுகிறது.

மேரிடைம் நெட்வொர்க் நிறுவனத்தின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பக்தர்களுக்கான அன்னதானம் வழங்கப்படுகிறது.வரும் காலங்களில் இது தொடரும் என்று அவர் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles