பத்தாங் பாடாங் மாவட்டத்திற்கு புதிய சுகாதார அதிகாரி – டிங்கி பிரச்னைக்கு தீவிர நடவடிக்கை! டத்தோ சிவநேசன் தகவல்!

பீடோர்,செப் 30-

புதிய பத்தாங் பாடாங் மாவட்ட சுகாதார அதிகாரியாக டாக்டர் புனிதா அவர்கள் நியமிக்கப்பட்டிருப்பதாக கூறிய பேரா மாநில சுகாதாரம்,மனிதவளம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் இம்மாவட்டத்தில் சுகாதாரப் பிரச்னைக்கு தீவிர கவனம் செலுத்தப்படும் என்றும் ஒவ்வொரு சிக்கல்களுக்கும் தீர்வை ஏற்படுத்துவதில் மாவட்ட சுகாதார பிரிவு முனைப்பு காட்டும் என்றும் தெரிவித்தார்.

பத்தாங் பாடாங் மாவட்டத்தைப் பொருத்தமட்டில் ஐந்து சுகாதார கிளினிக்குகளும் ஒரு பொது மருத்துவமனையும் இருக்கும் பட்சத்தில் டாக்டர் புனிதாவின் தலைமைத்துவத்தின் கீழ் சுமார் 120 சுகாதாரப் பணியாளர்கள் கடமையில் இருப்பதாகவும் கூறிய அவர் தாம் மூன்று தவணைகள் சுகாதாரப் பிரிவிற்கு தலைமையேற்றிருப்பதாகவும் இம்மாவட்டம் மட்டுமின்றி மாநில அளவில் சுகாதாரம் சார்ந்த சிக்கல்களைக் களைவதிலும் அதுசார்ந்த முன்னெடுப்புகளைம் ஆக்கப்பூர்வமாக மேற்கொண்டும் வந்துள்ளதாக கூறினார்.

மரியாதை நிமித்தமாக தன்னைச் சந்திக்க வந்த டாக்டர் புனிதாவை சந்தித்தப் பின்னர் டத்தோ சிவநேசன் செய்தியாளர்களிடம் இதனைத் தெரிவித்தார்.

பத்தாங் பாடாங் ஒரு பெரிய மாவட்டம் என்றும் இங்குதான் அதிகமான பூர்வகுடிகள் சுமார் 20 கிராமங்களில் வசிப்பதாகவும் சுட்டிக்கான்பித்த டத்தோ சிவநேசன் ஒவ்வொரு முறையும் டிங்கி சார்ந்த சிக்கல்களை பூர்வகுடிகள் கிராமமும் சில மலாய் கிராமங்களும் எதிர்கொள்வது வழக்கமாக இருப்பதாகவும் நினைவுக்கூர்ந்த அவர் அச்சிக்களைக் களைய ஆக்கப்பூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அது சார்ந்த விழிப்புணர்வும் சம்மதப்பட்ட பகுதிகளில் வழங்கப்படும் என்றும் கூறினார்.

சம்மதப்பட்ட பூர்வகுடி கிராமங்களுக்கு நடமாடும் கிளினிக் வசதிகளும் இருந்து வருவதாக கூறிய டத்தோ சிவநேசன் சம்மதப்பட்ட கிராமங்களுக்கு குப்பை எடுக்கும் வசதியில்லை எனவும் அவை ஊராட்சி மன்றங்களுக்கு உட்பட்டு இல்லையென்பதே அதற்கு காரணம் எனவும் கூறினார்.

இந்நிலையில்,சம்மதப்பட்ட கிராமங்களில் குப்பைகளை அகற்றும் நடவடிக்கை குறித்து ஆராயப்படும் எனவும் டிங்கி சார்ந்த சுகாதாரப் பிரச்னைகளுக்குத் தீர்வு காண அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்றுன் குறிப்பிட்டார்.

மேலும்,அதற்கான பொருளாதார சிக்கல் உட்பட அனைத்து விதமான ஆதரவையும் பங்களிப்பையும் வழங்கிட தாம் தயாராகவே இருப்பதாகவும் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles