தாமான் மெஸ்ராவின் அடுக்குமாடி குடியிருப்பின் கூரைப் பிரச்சனைக்குத் தீர்வு காணவும், குடியிருப்பு வசதிகளை மேம்படுத்தவும் RM601,400 நிதி ஒதுக்கீடு அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

தாமான் மெஸ்ரா அடுக்குமாடி குடியிருப்பின் கூட்டு நிர்வாகக் குழுவான JMB, செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் குணராஜ் ஜோர்ஜ் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினரின் ஆதரவில் இந்த நிதி ஒதுக்கீடு கிடைத்துள்ளது.

எனினும், கூரைப் பழுதுபார்ப்புப் பணிகளை முழுமையாகத் தொடங்குவதற்கு முன்னர் இன்னும் சில தொடர் நடைமுறைகள் நிறைவு செய்யப்பட வேண்டியுள்ளதாக JMB பிரதிநிதி கூறினார்.

இத்திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்துவதற்கும், பிற வசதிகளைப் படிப்படியாக மேம்படுத்துவதற்கும் சம்பந்தப்பட்ட அனைத்து தரப்பினரின் தொடர்ச்சியான ஒத்துழைப்பும் ஆதரவும் அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

இந்த மூலம் குடியிருப்பாளர்களின் வசதி, பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மேலும் மேம்படும் என நிர்வாகத் தரப்பு நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles