மலாக்கா தேர்தல்: கூட்டணி குறித்து பக்காத்தான் ஹராப்பான் இன்னும் முடிவு செய்யவில்லை !

ஷா ஆலம், அக் 1-
மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காக எந்தவொரு அரசியல் கட்சியுடனும் கூட்டணி அமைப்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (PH) இதுவரை இறுதி முடிவு எடுக்கவில்லை என அதன் தேர்தல் இயக்குநர் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்துள்ளார்.

எனினும், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்வதற்கு முன்னர், சாத்தியமான ஒத்துழைப்புகள் மற்றும் அதற்கான வாய்ப்புகளை பக்காத்தான் ஹராப்பான் ஆராயும்.

மலாக்கா PH தரப்பின் கருத்துகளை கேட்டறிந்து, அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து கொள்கை ரீதியான முடிவை எடுப்பதற்காக அதனை மத்திய தலைமை மன்றத்தில் இறுதி செய்ய வேண்டும்.

சில தரப்புகளுடன் புரிந்துணர்வுடன் போட்டியிடுவதா அல்லது தங்களுக்கான பகுதிகளில் கவனம் செலுத்துவதா என்பது பின்னர் முடிவு செய்யப்படும் என்று அவர் தெரிவித்தார்.

இதனிடையே, எதிர்வரும் நாட்களில் பாரிசான் நேஷனல் (BN) தரப்புடன் சந்திப்பு நடைபெறவுள்ளதாகவும், அதில் தேர்தல் ஒத்துழைப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்படும் எனவும் தமக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளதாக அமிருடின் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles