டத்தோ சிவநேசன் தலைமையில் பீடோரில் சமூக நல்வாழ்வு விழா – பீடோர் சுங்கை மக்கள் திரளாய் கலந்து கொள்ள அழைப்பு!!

பீடோர், அக் 2-
மக்கள் நல்வாழ்வு மற்றும் அதுசார்ந்த கருத்தியல் தகவல் பகிரும் நிகழ்ச்சி சுங்கை சட்டமன்ற உறுப்பினரும் மாநில மனிதவளம்,சுகாதாரம்,தேசிய ஒருமைப்பாடு மற்றும் இந்தியர் நல்வாழ்வுக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு டத்தோ அ.சிவநேசன் தலைமையில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி வருகின்ற 03.10.2026 சனிக்கிழமை காலை மணி 8.30 தொடங்கி மதியம் 1.00 மணி வரை பீடோர் டேவான் முகிபாவில் சிறப்பாக நடைபெறவுள்ளது.

மக்களின் சமூகநலன் சார்ந்து முன்னெடுக்கப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் இரஹ்மா அத்தியாவசிய உணவு பொருட்கள் விற்பனைத் திட்டம்,இலவச மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் காவல்துறை மற்றும் போக்குவரத்து சம்மன்களின் கட்டணக்கழிவு ஆகியவைகளும் இடம் பெறும் என்ற தகவலைவும் டத்தோ சிவநேசன் தெரிவித்தார்.

அதுமட்டுமின்றி, யாயாசான் பேரா,PASAK தொழிற்திறன் பிரிவு,தாப்பா ஊராட்சி மன்றம்,தொழிலியல் இலாக்கா,பத்தாங் படாங் நிலம் மற்றும் மாவட்ட இலாகாவின் தகவல் முகப்புகளுடன் சொக்சோ,இ.பி.எப் உட்பட பயிற்சி மற்றும் சமூக மேம்பாட்டு மையம் (PLPK) ஆகியவற்றின் முகப்பு சேவைகளும் இடம் பெற்றிருக்கும் என்றார்.

மக்களுக்காக அவர்களின் மேம்பாட்டிற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் இந்நிகழ்ச்சியில் அதிகமானோர் கலந்து கொண்டு அரசாங்கம் வழங்கும் மலிவான விலையில் வீட்டுக்குத் தேவையான அத்தியாவசிய உணவு பொருட்களை வாங்கி செல்வதோடு மட்டுமின்றி மாநில அரசின் கீழ் வழங்கப்படும் பல்வேறு சலுகைகள்,திட்டங்கள் குறித்தும் தகவல் பெற்று அதன் வாயிலாக நன்மையும் அடையலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில், வழங்கப்படும் சம்மன் கட்டணக் கழிவுகள் வாயிலாக போக்குவரத்து குற்றங்களுக்கான சம்மனையும் ச்ந்லுத்தி விடலாம்.

மேலும்,ஊராட்சி மன்றன்,நிலம் மற்றும் மாவட்ட மன்றம் சார்ந்த பல்வேறு ஐயங்களுக்கும் சிக்கல்களுக்கும் போதுவான விளக்கத்தையும் தீர்வுகளையும் கூட இந்நிகழ்ச்சி வாயிலாக பொதுமக்கள் பெற்று கொள்ளலாம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதே வேளையில்,மாணவர்கள் PASAK முகப்பின் வழி தொழிற்திறன் கல்வி சார்ந்தும் எஸ்.பி.எம் தேர்வுக்கு பின்னர் அதன் வாயிலாக நல்லதொரு தொழில் கல்வி பயணத்தைத் தொடங்கவும் இது ஒரு வாய்ப்பாக அமையும்.

மக்களைத் தேடி அரசு திட்டங்கள் வரும்போது அதனை நன்முறையில் மக்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என கேட்டு கொண்ட டத்தோ சிவநேசன் நிகழ்சி அன்று பீடோர் மற்றும் சுங்கை வாழ் மக்கள் திரளாக கலந்து கொள்ளுமாறும் கேட்டு கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles