இணையவழி சூதாட்டம், மோசடி கும்பல் முறியடிப்பு: 74 வெளிநாட்டினர் கைது கோலாலம்பூரைச் சுற்றியுள்ள பகுதிகளில் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ‘ஓப்ஸ் டாடு காஸ்’ (Ops Dadu Khas) அதிரடி சோதனையில் 74 வெளிநாட்டினர் கைது செய்யப்பட்டனர்.

அதைத் தொடர்ந்து, இணையவழி சூதாட்டம் மற்றும் மோசடி கும்பலின் நடவடிக்கையைப் போலீசார் முறியடித்தனர்.

வர்த்தகக் குற்றப் புலனாய்வுத் துறையுடன் (JSJK) இணைந்து எட்டு குடியிருப்பு வளாகங்களில் இந்த ஒரே நேரத்திலான அதிரடி சோதனை நடத்தப்பட்டதாக புக்கிட் அமான் குற்றப் புலனாய்வுத் துறையின் இயக்குநர் டத்தோ எம். குமார் தெரிவித்தார்.

அந்த கைது நடவடிக்கையில் 20 முதல் 50 வயதுக்குட்பட்ட 67 ஆண்கள் மற்றும் ஏழு பெண்கள் அடங்குவர். அவர்களில் 61 பேர் சீனா, 12 பேர் வியட்நாம் மற்றும் ஒருவர் தைவான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என அவர் கூறினார்.

“பரிசோதனையில், இந்த எட்டு வளாகங்களும் இணையவழி சூதாட்டம், காதல் அழைப்பு மோசடிமற்றும் இல்லாத முதலீட்டு மோசடிகளை ஊக்குவிக்கும் நடவடிக்கைகளுடன் தொடர்புடையவை என நம்பப்படுகிறது.

மேலும், அவை மோசடி அழைப்பு மையத்தில் வேலை செய்தவர்களின் தங்குமிடங்களாகவும் பயன்படுத்தப்பட்டன,” என்று அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles