தாமான் ஸ்ரீ மூடா தீர்ப்பு : ஷா ஆலாம் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு மேம்படுத்தும்

ஷா ஆலாம், செப் 3 2021-ஆம் ஆண்டு தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் ஏற்பட்ட கடுமையான வெள்ளப் பெருக்குக்கு அரசாங்கமே பொறுப்பு என உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்ததை அடுத்து, ஷா ஆலாமில் வெள்ளத் தடுப்புப் பணிகளை சிலாங்கூர் அரசு மேம்படுத்தும் என்று ஊராட்சி சுற்றுலாத்துறைக்கான மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ ங்கு சூ லிம் (Dato’ Ng Suee Lim) தெரிவித்தார்.

தாமான் ஸ்ரீ மூடா தேக்ககம், வடிகால் அமைப்பு, அருகிலுள்ள நதிக்கரைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல், ஷா ஆலம் நகர்ப்புற மழைநீர் வடிகால் நடவடிக்கை திட்டம் (SASUD), செக்க்ஷன் 25 கிள்ளான் நதி வெள்ளத் தடுப்புத் திட்டம் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மாநில அரசும், ஷா ஆலம் மாநகராட்சி மன்றமும் (MBSA) தொழில்நுட்ப அமைப்புகளும் இணைந்து செயல்படுத்தும் என்று அவர் கூறினார்.

“ தாமான் ஸ்ரீ மூடாவைச் சுற்றியுள்ள கிள்ளான் ஆற்றை ஆழப்படுத்தும் நடவடிக்கைகளையும் மாநில அரசு எடுத்துள்ளது. இதனால் ஆற்றின் கொள்ளளவு சுமார் 20 சதவீதம் அதிகரிக்கும்.

மேலும் இப்பகுதியில் பம்புகள் மற்றும் மதகுகளின் நிர்வகிப்பும் மேம்படுத்தப்படும்,” என்று அவர் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles