
அடுத்த மாதம் கொண்டாடப்படவிருக்கும் தீபாவளி பண்டிகைக்குத் தயாராவதற்கு இந்திய தொழில்முனைவோருக்கு உதவும் வகையில், தொழில்முனைவோர், கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சு தீபாவளி மக்கள் வர்த்தக விழா செலவினங்கள் (BERKAT) திட்டத்தின் மூலம் 30 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கியுள்ளது.
தெக்குன் மூலமான இந்த சிறப்புத் திட்டம், 12 மாத காலத்திற்கு ஆண்டுக்கு மூன்று சதவிகித லாப விகிதத்தில் 30,000 ரிங்கிட் வரை நிதியுதவி வழங்குகிறது என்று தொழில்முனைவோர் மேம்பாடு கூட்டுறவு அமைச்சர் ஸ்டீவன் சிம் கூறினார்.
குறிப்பாக, பொருட்ககை அதிகரிக்கவும் பண்டிகைக் காலத்திற்குத் தயாராகவும் குறுகிய காலத்தில் செயல்பாட்டு மூலதனம் தேவைப்படும் சிறு வணிகர்களுக்கு இந்த வசதி முக்கியமானது.
தீபாவளிக்கு இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், இந்திய தொழில்முனைவோர், வர்த்தகர்களுக்காக ‘பெர்காட் தீபாவளி’ திட்டத்தை நான் அறிவிக்கிறேன்.
தீபாவளி தொழில்முனைவோர், தீபாவளி பஜார், லிட்டில் இந்தியா போன்றோர் இந்த நிதி ஒதுக்கீட்டைப் பயன்படுத்திக் கொள்வார்கள் என நம்புகிறோம் என்று கூறினார்.
தீபாவளியை முன்னிட்டு, உணவு, பானங்கள், ஆடை, உபகரண விற்பனைத் துறைகளில் உள்ள சிறு வர்த்தகர்கள் மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கு இந்த நிதியுதவியை கூடுதல் செயல்பாட்டு மூலதனமாகப் பயன்படுத்தலாம் என்று ஸ்டீவன் சிம் கூறினார்.
‘பெர்காட் தீபாவளி’ திட்டம் இன்று முதல் நவம்பர் 8 வரை திறந்திருக்கும் என்றும், டெக்குன் ஆன்லைன் விண்ணப்ப முறை மூலமாகவோ அல்லது நாடு முழுவதும் உள்ள தெக்குன் கிளை அலுவலகங்களிலோ விண்ணப்பிக்கலாம்.

