வணிக உரிம செயல்முறைகளை நெறிப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய அமைச்சர் ஹன்னா இயோவிற்கு மிம்கோய்ன் பாராட்டு

வணிக உரிம செயல்முறைகளை நெறிப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை நிறைவேற்றிய கூட்டரசுப் பிரதேச அமைச்சர் ஹன்னா இயோவிற்கு மிம்கோய்ன் பாராட்டுகிறது.

மிம்கோய்ன் தலைவர் டத்தோ ஹாஜி அப்துல் ஹமித் இதனை கூறினார்.

கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் வணிக உரிம செயல்முறைகளை நெறிப்படுத்துவதாக அளித்த வாக்குறுதியை அமைச்சர் வெற்றிகரமாக நிறைவேற்றியுள்ளார்.

கடந்த மார்ச் மாதம், கோலாலம்பூரின் வணிக சமூகத்தின் மீதான நிர்வாகச் சுமையைக் குறைப்பதற்கான நடைமுறைத் தீர்வுகள் குறித்து ஆலோசனை வழங்குவதற்காக, ஹன்னா இயோ மிக்கோய்ன், சில தேர்ந்தெடுக்கப்பட்ட வர்த்தக சபைகளை அழைத்திருந்தார்.

இன்று, வெறும் இரண்டு மாதங்களுக்குள் 8,000-க்கும் மேற்பட்ட வணிகங்கள், பல ஆண்டு உரிம விருப்பங்கள், செலவுக் குறைப்புச் சலுகைகள் மூலம் பயனடைவதைக் காண்பது, அவர் சொன்னதைச் செய்பவர் என்பதை நிரூபித்துள்ளார்.

இந்த முன்முயற்சியானது, திரும்பத் திரும்ப வரும் அதிகாரத்துவ நடைமுறைகளைக் குறைப்பது மட்டுமல்லாமல், நிறுவனங்களுக்கும் வணிக உரிமையாளர்களுக்கும் செழித்து வளரத் தேவையான உறுதியையும் செயல்திறனையும் அளிக்கிறது.

மக்களின் குரலுக்குச் செவிசாய்த்து, தங்கள் வாக்குறுதியை நிறைவேற்றி, வணிகச் சூழலுக்கு நேரடியாக வலுவூட்டும் சீர்திருத்தங்களை முன்னெடுத்த அமைச்சர் ஹன்னா இயோ, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தை நாங்கள் பாராட்டுகிறோம் என்று டத்தோ அப்துல் ஹமித் கூறினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles