மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.இராஜனை நலம் விசாரித்தார் துணை அமைச்சர் யூனிஸ்வரன்

செலாயாங், அக் 8-
உடல் நலம் பாதிக்கப்பட்டு செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மக்கள் ஓசை ஆசிரியர் பி.ஆர்.இராஜனை ஒற்றுமை துறை துணை அமைச்சர் யூனிஸ்வரன் இன்று நலம் விசாரித்தார்.

கடந்த ஒரு மாதமாக ஆசிரியர் பி.ஆர்.இராஜன் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று தகவல் தொடர்பு துணை அமைச்சர் தியோ நிக் சிங், பெர்னாமா நிறுவனத்தின் தலைமை செயல் முறை அதிகாரி டத்தின் படுக்கா நூருல் மற்றும் மலேசியத் தமிழ் பத்திரிகையாளர் சங்கத்தின் தலைவர் முத்தமிழ் மன்னன் ஆகியோர் நேரில் வருகை தந்து நலம் விசாரித்தனர்.

இந்நிலையில் இன்று மாலையில் வருகை தந்த துணை அமைச்சர் யூனிஸ்வரனுக்கு மருத்துவர்கள் விளக்கம் அளித்தனர்.

தினத்தந்தி நிருபர் காளிதாஸ் சுப்ரமணியம் உட்பட பி.ஆர்.இராஜன் குடும்ப உறுப்பினர்கள் உடன் இருந்தனர்

மேலும் செலாயாங் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தினத்தந்தி இணையத் தளம் நிருபர் காளிதாஸ் சுப்ரமணியம் தாயாரையும் துணை அமைச்சர் யூனிஸ்வரன் நலம் விசாரித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles