
மலேசிய மக்களவை நாடாளுமன்ற செனட்டராக நியமனம் பெற்று இருக்கும் டத்தோ சிவராஜாவுக்கு,
பெருவாஸ் நாடாளுமன்ற உறுப்பினரின் இந்திய நலப் பிரிவு சிறப்பு அதிகாரி தினகரன் கோவிந்தசாமி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார் .
கடந்த காலங்களில் தாம் எதிர்க்கட்சியாக இருக்கும் பொழுது, அரசியலில் கருத்து வேறுபாடுகள் இருந்திருக்கலாம்,
அவையாவும் மக்கள் நலனுக்காகவே மட்டும் ஒழிய, தனிமனித விருப்பு வெறுப்பு ஏதுமில்லை.
தற்போது அமைந்திருக்கும் ஒற்றுமை அரசாங்க தலைமைத்துவத்தில்
இந்த செனட்டர் பதவி,
இப்பொழுது இருக்கின்ற ஆளும் கட்சியில் இணைந்திருக்கும் மஇகா விற்கு கிடைத்த அங்கீகாரம் என்றும்,
கடந்த காலங்களில் சிவராஜ் செய்த, மக்கள் சேவை இதற்கு ஒரு சான்று என்று புகழாரம் சூட்டினார் தினகரன்.

