தமிழ்ப்பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்த
பெற்றோர்களுக்கு நன்றி!
மனித வள அமைச்சர் சிவகுமார் கூறுகிறார்

நேற்று நாடு தழுவிய அளவில் பள்ளிகள் திறக்கப்பட்ட வேளையில் தமிழ்ப் பள்ளிகளில் முதலாம் வகுப்பில் 12,539 மாணவர்கள் காலடி எடுத்து வைத்தனர்.

தமிழ்ப் பள்ளிகள் மீது நம்பிக்கை வைத்து தங்கள்பிள்ளைகள் சேர்ந்த பெற்றோர்களை பெரிதும் பாராட்டுவதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

தமிழ் பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் வருங்காலத்தில் தலைசிறந்த மாணவர்களாக விளங்குகிறார்கள்.

அந்த வகையில் தமிழ் பள்ளிகளில் தங்கள் பிள்ளைகளை உற்சாகத்தோடு அனுப்பி வைத்த பெற்றோர்கள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள்.

முதலாம் வகுப்பில் சேர்ந்த மாணவர்கள் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தாலும் இனிவரும் காலங்களில் இந்த எண்ணிக்கை அதிக அளவில் உயரும் என்ற நம்பிக்கை பிறந்திருப்பதாக அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles