தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவோடு பிபிபி கட்சியின் இளைஞர் அணி ஏற்பாட்டில்மகாகவி பாரதியார் “நேற்று இன்று நாளை” விழா!

காளிதாஸ் சுப்ரமணியம்

கோலாலம்பூர் நவ 20-
நவீன தமிழ் கவிதையின் முன்னோடியும், சுதந்திரப் போராட்ட வீரரும், சமூக சீர்திருத்தவாதியும், இதழியலாளருமான மகாகவி பாரதியாரின் நேற்று இன்று நாளை எனும் தலைப்பில் மாபெரும் விழா வரும் டிசம்பர் 19 ஆம் தேதி ஜாலான் அம்பாங்கில் உள்ள மசீச மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.

தேசிய நிலநிதி கூட்டுறவு சங்கத்தின் ஆதரவோடு பிபிபி கட்சியின் இளைஞர் அணி ஏற்பாட்டில் இந்த விழா ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்று பிபிபி இளைஞர் அணி தலைவர் சத்யா சுதாகரன் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் மகாகவி சுப்பிரமணிய பாரதியாரின் வழித்தோன்றலான நிரஞ்சன் பாரதி (Niranjan Bharathi) அவர்கள் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளார்.
மேலும் மலாயா பல்கலைக்கழகத்தின் திருவள்ளுவர் இருக்கை முனைவர் டாக்டர் ஏ.செல்லபெருமாள் கலந்து கொள்கிறார்.

இரண்டாயிரம் பேர் இந்த விழாவில் கலந்து கொள்வார்கள் என்று எதிர் பார்க்கிறோம்.

மகாகவி பாரதியாரின் 144 வயது முன்னிட்டு இந்த விழா மிகப் பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மகாகவி பாரதியார் அவர்கள் பெண் உரிமை, விதவை மறுமணம், சாதி எதிர்ப்பு ஆகியவற்றை கடுமையாக வலியுறுத்தினார்.

இந்தியாவில் முதன்முறையாக 1949-இல் இவரது படைப்புகள் நாட்டுடைமையாக்கப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

ஆரம்ப பள்ளி, இடைநிலை பள்ளி மற்றும் உயர் கல்வி மாணவர்கள் பங்கேற்கும் வகையில் மூன்று பிரிவுகளில் கட்டுரை போட்டிகள் நடத்தப்படுகின்றன.

கட்டுரை போட்டிகளில்வெவெற்றி பெறுபவர்களுக்கு ரொக்கப் பரிசுகள் வழங்கப்படும் என்று அவர் சொன்னார்.

பிபிபி கட்சியின் தேசிய தலைவர் டத்தோ டாக்டர் லோகபாலா உட்பட பல முக்கிய பிரமுகர்கள் இந்த விழாவில் கலந்து கொள்கிறார்கள்.

இந்த விழாவில் அனைவருக்கும் கலந்து கொள்ளலாம். அரசியல் வேறுபாடுயின்றி இந்த மகாகவி பாரதியார் விழா நடைபெறுகிறது என்று அவர் சொன்னார்

இன்று பிபிபி கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிபிபி கட்சியின் மகளிர் அணி தலைவி புனிதா முனுசாமி உட்பட இளைஞர் அணி பொறுப்பாளர் இதில் கலந்து கொண்டனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles