திருப்பத்தூரில் கோலாகலமாக நடைபெற்ற அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளையின் கொள்ளுப் பேரன் திருமணம்

திருப்பத்தூர், நவ.21-
அருள்மாமணி என்.டி.எஸ். ஆறுமுகம் பிள்ளை – ஆ. சீதை அம்மாள் ஆகியோரின் கொள்ளுப் பேரனும், நா. ஆறு. நாகராஜன் – நா. சகுந்தலா அம்மாள் ஆகியோரின் பேரனும், நா. இராமேஸ்வரன் – ரா. பிரியா ஆகியோரின் புதல்வருமான நாகராஜன் ராமேஸ்வரனுக்கும், டாக்டர் தக்ஷிணாவுக்கும் திருமணம் இன்று காலை 9.15 மணியளவில் திருப்பத்தூரில் உள்ள ஆறுமுகம் பிள்ளை – சீதை அம்மாள் கல்லூரி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.

இத்திருமண விழாவில் புதுமணத் தம்பதியினரின் உறவினர்கள், முன்னாள் அமைச்சர் பெரு. கருப்பன், திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் ரகுபதி, முன்னாள் அமைச்சர் தென்னவன், சிவகங்கை மேதகு ராணி டி.எஸ்.கே. மதுராந்தகி நாச்சியார், அ.தி.மு.க. மாவட்டச் செயலாளர் செந்தில், குன்றக்குடி பொன்னம்பலம் அடிகளார், மலேசிய இந்திய வர்த்தக, தொழில்துறை சம்மேளனமான மைக்கியின் தலைவர் டத்தோஸ்ரீ என். கோபாலகிருஷ்ணன், பினாங்கு தொழிலதிபர் சி.டி. சிதம்பரம், மலேசியாவிலிருந்து எம்.ஜி.ஆர். தேவன், புகைப்படக் கலைஞர் பி.மலையாண்டி, அவரின் புதல்வி கல்பனா மலையாண்டி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மேலும், திருப்பத்தூர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், அரசியல் பிரமுகர்கள் எனப் பத்தாயிரத்துக்கும் மேற்பட்டோர் திரளாகப் பங்கேற்று மணமக்களை வாழ்த்தினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles