

ஈப்போ, நவ 21-
உலக தரம் வாய்ந்த ஹாக்கி குழுக்கள் பங்கேற்றுள்ள சுல்தான் அஸ்லான் ஷா கிண்ண ஷாக்கி போட்டி நேற்று ஈப்போ அரங்கில் அதிகாரப்பூர்வமாக தொடங்கியது.
நேற்று மாலை 4.00 மணிக்கு நடைபெற்ற முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5-1 என்ற கோல் கணக்கில் அமெரிக்காவை வீழ்த்தியது.
பின்னர் நடைபெற்ற மற்றொரு ஆட்டத்தில் மலேசியா 3-0 என்ற கோல் கணக்கில் தென் கொரியாவை வீழ்த்தி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
தொடக்கம் முதல் இறுதி வரை மலேசியா அபார ஆட்டத்தை வெளிப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

