
தோக்கியோ, நவ 21-
ஜப்பான் தலைநகர் தோக்கியோவில் நடைபெற்ற அனைத்துலக ரோபோட்டிக்ஸ் போட்டியில் மலேசியாவுக்கு 153 பதக்கங்கள் கிடைத்துள்ளது.
இதில் 23 தங்கம் , 19 வெள்ளி மற்றும் 111 வெண்கலம் வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த போட்டியில் 67 மலேசிய மாணவர்கள் 21 பிரிவுகளில் பங்கேற்றனர்.
சர்வதேச அரங்கில் தங்களது அபாரமான திறமையையும் சாதனைகளையும் வெளிப்படுத்தி, மலேசியாவுக்குப் பெருமை சேர்த்துள்ள நமது இளம் ரோபோட்டிக்ஸ் சாம்பியன்களுக்கு வாழ்த்துகள் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியகராஜ் சங்கர நாராயணன் தெரிவித்தார்.
போட்டிப் பிரிவுகளின்படி மலேசிய மாணவர்களின் பங்கேற்பு
🔹 SUMO ரோபோட்டிக்ஸ்
- ஜூனியர் ஆட்டோ – 19
- ஜூனியர் RC – 19
- ஜூனியர் பேசிக் RC – 17
- ஜூனியர் பேசிக் ஆட்டோ – 17
- குடும்ப SUMO – 16
- சீனியர் ஆட்டோ – 16
- சீனியர் RC – 16
🔹 லைன் டிரேசிங் (Line Tracing)
- K-BEAM ஜூனியர் – 11
- I-BEAM ஜூனியர் – 16
- லைன் ஃபார்முலா ஜூனியர் – 2
- சீனியர் புரோகிராமபிள் – 7
ஒரு நிமிடப் போட்டிகள் (One Minute Games)
- பந்தை இலக்கை நோக்கி எறிதல் (Shoot the Ball) – 5
- கேனை நகர்த்துதல் (Move the Can) – 3
ரோபோ விளையாட்டுப் போட்டிகள் (Robot Sports)
- சாக்கர் ரோபோ 4×4 – 52
- பால் ஃபைட்டிங் – 30
புதுமை கண்டுபிடிப்புப் பிரிவு (Innovation)
- ஜூனியர் – 24
- சீனியர் – 10
ட்ரோன் போட்டிகள் (Drone Competitions)
- ட்ரோன் சாக்கர் பிரஷ்டு – 6
- ட்ரோன் சாக்கர் பிரஷ்லெஸ் – 30
- ட்ரோன் ரேசிங் – 46
- சர்வதேச நட்புரீதிப் போட்டி – 15 உலக நாடுகளுடன் போட்டியிட்டு, மலேசியாவுக்குப் பெருமை சேர்த்த நமது இளம் சாதனையாளர்கள்! மிகவும் பாராட்டுக்குரியது என்று அவர் சொன்னார்.
இதனிடையே ஜப்பான் அனைத்துலக ரோபோடிக்ஸ் போட்டியில் பதக்கம் வென்று சாதனை படைத்த மலேசிய மாணவர்களுக்கு பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவரும் ஜெயா உணவக உரிமையாளருமான டத்தோ சுரேஷ் தமது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார்.

