


கோலாலம்பூர் நவ 21-
வரும் நவம்பர் 25 ஆம் தேதி மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் மாநாடும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வும் நடைபெறுகிறது.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் பிரச்சாரம் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.
தலைவர், துணை தலைவர், உதவித் தலைவர், செயலாளர் மற்றும் பொருளாளர் பதவிக்கு கடுமையான போட்டி நிலவுகிறது.
டாக்டர் சீனு மற்றும் கிருஷ்ணன் அணி இம்முறை களத்தில் இறங்கி உள்ளது.
டாக்டர் சீனு அணியில் தலைவர் பதவிக்கு டாக்டர் சின்னையா அழகன் போட்டியிடுகிறார்.
நடப்பு துணை தலைவரான கிருஷ்ணன் இம்முறை தலைவர் பதவிக்கு போட்டியிடுகிறார்.
அதேசமயம் டாக்டர் சீனு அணியில் துணை தலைவர் பதவிக்கு சண்முகம், உதவித் தலைவர் பதவிக்கு லிங்கம், செயலாளர் பதவிக்கு தயாளன் மற்றும் பொருளாளர் பதவிக்கு பூபாலன் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
உணவக துறையில் 48 ஆண்டுகள் அனுபவம் வாய்ந்த என்னால் பிரிமாஸை சிறந்த முறையில் வழிநடத்துவேன் என்ற நம்பிக்கை உள்ளது என்று இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

