பிரிமாஸ் உறுப்பினர்களுக்கு எல்லா வகையிலும் உதவி புரிவேன்-தலைவர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் சீனு அறிவிப்பு

கோலாலம்பூர் நவ 21-
பிரிமாஸ் உறுப்பினர்களுக்கு எல்லா வகையிலும் உதவி செய்வேன் என்று தலைவர் பதவிக்கு போட்டியிடும் டாக்டர் சீனு தெரிவித்தார்.

டீம் டாக்டர் சீனு அணியினர் எண் 2-இல் போட்டியிடுகின்றனர் .

உணவக உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முன்னுரிமை கொடுப்பேன் என்று அவர் சொன்னார்.

மலேசிய இந்திய உணவக உரிமையாளர் சங்கமான பிரிமாஸ் (PRIMAS) தலைவர் பதவிக்கு டாக்டர் சின்னையா அழகன் (சீனு) போட்டியிடுகிறார்.

அவரது தலைமையில் அமைந்துள்ள டீம் டாக்டர் சீனு அணியில் போட்டியிடும் அனைத்து வேட்பாளர்களும் எண் 2-இல் போட்டியிடுகின்றனர்.

சங்க உறுப்பினர்கள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகளைக் களைந்து, உணவக உரிமையாளர்கள் எவ்வித அச்சமுமின்றி தங்களது தொழிலை நடத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை முன்னெடுப்பதே அணியின் முக்கிய நோக்கமாகும் என்று அவர் சொன்னார்.

குறிப்பாக, உணவகத் துறையில் நிலவும் மாற்று அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பான பிரச்சினைக்கு முன்னுரிமை அளித்து, அதற்கான தீர்வுகளைப் பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும்.

மேலும், புதிதாக உணவகத் தொழிலைத் தொடங்க விரும்பும் உரிமையாளர்கள் பிரிமாஸ் சங்கத்தைத் தங்களது தாய் வீடாகக் கருதி வரவேண்டும் என்றும், உணவகம் தொடங்குவதற்கான நடைமுறைகள், வழிகாட்டுதல்கள் உள்ளிட்ட தேவையான உதவிகளை வழங்கத் தயாராக இருப்பதாகவும் டாக்டர் சின்னையா அழகன் தெரிவித்துள்ளார்.

உணவகத் துறையில் 48 ஆண்டுகால அனுபவம் கொண்டுள்ள தாம், அந்த அனுபவத்தையும் தொழில் சார்ந்த அறிவையும் உறுப்பினர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புவதாகக் குறிப்பிட்ட அவர், அனைவரும் தன்னுடன் இணைந்து வெற்றிப் பாதையில் பயணிக்க அழைப்பு விடுத்துள்ளார்.

டீம் டாக்டர் சீனு அணியின் வேட்பாளர்கள் விவரம்:

  1. தலைவர் – டாக்டர் சின்னையா அழகன்
  2. துணைத் தலைவர் – சண்முகம்
  3. உதவித் தலைவர் – லிங்கம்
  4. செயலாளர் – தயாளன்
  5. பொருளாளர் – பூபாலன்

துணைத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சண்முகம், உணவக உரிமையாளர்களின் நலன்களையும் சங்கத்தின் வளர்ச்சியையும் கருத்தில் கொண்டு அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“ஒற்றுமையாக இருப்போம்… உயர்வோம்!” என்ற முழக்கத்துடன் களமிறங்கியுள்ள டீம் டாக்டர் சீனு அணியினர், சங்க உறுப்பினர்களின் ஆதரவை நாடியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles