இந்திய உணவக உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரிமாஸ் உறுப்பினர் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்: தலைவர் வேட்பாளர் கிருஷ்ணன் வேண்டுகோள்

கோலாலம்பூர் நவ 23-
இந்திய உணவக உரிமையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுக் காண பிரிமாஸ் உறுப்பினர் ஒன்றாக கைகோர்க்க வேண்டும்.

இதை உறுதி செய்வதே எனது முதன்மை இலக்கு என்று பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்திய உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் வேட்பாளர் சி. கிருஷ்ணன் கூறினார்.

பிரிமாஸின் ஆண்டுக் கூட்டமும் புதிய நிர்வாகக் குழு தேர்வும் வரும் நவம்பர் 25ஆம் தேதி சுபாங் டோர்செட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
மதியம் 2 மணி முதல் நடைபெறும் இக்கூட்டத்தில் உறுப்பினர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

குறிப்பாக புதிய நிர்வாகக் குழுவை தேர்வு செய்ய உறுப்பினர்கள் கண்டிப்பாக வர வேண்டும்.

காரணம் கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த உணவகங்களின் நிலைக்கும், இன்றைய நிலைக்கும் இடையே மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது.

தற்போது உணவகங்கள் அனைத்தும் நவீன வசதிகளுடனும், மிகத் தரமான முறையிலும் மேம்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வளர்ச்சியில் பிரிமாஸின் பங்களிப்பு அளப்பரியதாக உள்ளது.

ஏனெனில், உணவகத் துறைக்கான அடிப்படை அனுமதிகள், கொள்கை ரீதியான சலுகைகளைப் பெறுவதற்கு நாம் பல்வேறு போராட்டங்களையும், பேச்சுவார்த்தைகளையும் எதிர்கொண்டுள்ளோம்.

பல கட்ட முயற்சிகளுக்குப் பிறகுதான் அரசாங்கத்திடமிருந்து தேவையான அனுமதிகளைப் பெற முடிந்தது.

பிரிமாஸ் துணைத் தலைவராக, வெளிநாட்டுப் பணியாளர்கள் தொடர்பான பிரச்சினைகளுக்குத் தீர்வு காண நமது தலைவர் டத்தோ ஜே. சுரேஷ் அவர்களுடனும், பிரிமாஸின் முன்னாள் தலைவர்களுடனும் நெருக்கமாகப் பணியாற்றி வந்துள்ளேன். அண்மையில், சென்னையில் மருத்துவப் பரிசோதனைக்காகக் கூடுதலாக RM1,500 வசூலிக்கப்படுவதாக உறுப்பினர்கள் தெரிவித்தனர். இது குறித்து டத்தோ ஜே. சுரேஷ் அவர்களும் நானும் அமைச்சர் YB டத்தோ ஸ்ரீ ரமணன் அவர்களின் உதவியை நாடினோம். வரும் ஆண்டுகளில் நமது உணவகங்களுக்குத் தேவையான பணியாளர்கள் கிடைக்க, சம்பந்தப்பட்ட அமைச்சகங்கள் மற்றும் அரசுத் துறைகளுடன் தொடர்ந்து பணியாற்றுவேன்.

கடந்த பத்து ஆண்டுகளாகப் பணியாளர் பற்றாக்குறையால், பல உணவக உரிமையாளர்கள் தங்கள் நேரத்தின் பெரும்பகுதியை உணவகங்களை நடத்துவதிலேயே செலவிட வேண்டியிருந்தது. இதனால் பிரிமாஸ் நடவடிக்கைகளில் பங்கேற்க அவர்களுக்குப் போதிய நேரம் கிடைக்கவில்லை. நமது உறுப்பினர்களை ஒன்றிணைப்பதும், புதிய உறுப்பினர்களைச் சங்கத்தில் சேர்ப்பதும் எனது முக்கிய நோக்கங்களில் ஒன்று. பல உணவக உரிமையாளர்கள் நமது்நிகழ்வுகளில் சந்தித்து தங்கள்அனுபவங்களைப்பகிர்ந்துகொள்ளும்போது, நமது துறையின் பிரச்சினைகளைப் பிரிமாஸ் இன்னும் வலுவாக எடுத்துரைக்க முடியும்.

உறுப்பினர்களுக்கு உதவ பிரிமாஸ் சார்பில் ஒரு சிறப்புச் செயற்குழுவை அமைப்பேன். வெளிநாட்டுப் பணியாளர் ஆட்சேர்ப்பு, FOMEMA மருத்துவப் பரிசோதனைகள், தொழிலாளர் துறை (JTK), சுங்கத் துறை, உள்ளாட்சி மன்றங்கள் மற்றும் பிற அரசு நடைமுறைகள் தொடர்பாகச் சிக்கல்களை எதிர்கொள்ளும் உறுப்பினர்கள் இந்தக் குழுவை நேரடியாக அணுகலாம். குழு அவர்களுக்கு வழிகாட்டுவதுடன், சம்பந்தப்பட்ட துறைகளைத் தொடர்புகொண்டு அவர்களின் கோரிக்கைகளைத் தொடர்ந்து கவனிக்கும்.

பிரிமாஸில் பணியாற்றிய அனுபவம் மேலும் Team 1 உறுப்பினர்களின் பல்வேறு திறமைகளும் உணவக துறையில் அவர்களின் நேரடி அனுபவமும் . நமது உறுப்பினர்களின் குறைகளைக் கேட்டு, அவற்றுக்குத் தீர்வு காண மிகுந்த பலமாக இருக்கும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்த முன்னேற்றத்தையும் உறுப்பினர்களுக்குத் தகவல்கள் பரிமாறிக் கொள்வோம்
பிரிமாஸின் ஆண்டுக் கூட்டமும் புதிய நிர்வாகக் குழு தேர்வும் வரும் நவம்பர் 25ஆம் தேதி சுபாங் டோர்செட் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.

அதேபோல், இனிவரும் காலங்களிலும் இளைஞர்களின் பங்களிப்புக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

இதன் அடிப்படையில் தான் சங்கத்தின் தலைவர் பதவிக்கு நான் போட்டியிடுகிறேன்.

எனது அணியில் அனுபவமிக்க மூத்த உறுப்பினர்களும், இளைஞர்களும் இடம்பெற்றுள்ளனர்.

பல்வேறு நிலைகளில் அனுபவம் பெற்றவர்களைக் கொண்ட நல்லதொரு குழுவாக எங்கள் அணி அமைந்துள்ளது.

மூத்த உறுப்பினர்களின் அனுபவத்தையும், இளைஞர்களின் புதிய சிந்தனைகளையும் ஒருங்கிணைத்து, அவர்களின் தொடர்புகள் மற்றும் திறமைகளைப் பயன்படுத்தி, சங்கம் தற்போது எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பேன்.

இதற்காக முழுமையாகக் களமிறங்கி உழைப்பேன் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது.

அனுபவமும், இளைய தலைமுறையின் ஆற்றலும் இணைந்த சிறந்த அணியாக நாங்கள் செயல்படத் தயாராக இருக்கிறோம்.

மேலும் போட்டியில் வெற்றிப் பெற்று வந்தால் நாடு தழுவிய அளைவிலுள்ள உறுப்பினர்களின் உணவகங்களை நேரடியாக சென்று கண்டு அவர்களின் பிரச்சினைகளை கேட்டு அறிய உள்ளேன்.

எனவே, உறுப்பினர்கள் அனைவரும் எங்கள் அணிக்கு ஆதரவு அளிக்க வேண்டும்.

குறிப்பாக, வாக்குச்சீட்டில் எங்கள் அணியை சேர்ந்தவர்களுக்கான எண் 1-க்கு வாக்களித்து எங்களை வெற்றிபெறச் செய்யுமாறு மீண்டும் அன்புடன் கேட்டுக் கொள்கிறேன் என்று கிருஷ்ணன் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles