
காளிதாஸ் சுப்ரமணியம்
கோலாலம்பூர் நவ 23-
பிரிமாஸ் எனப்படும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் ஆண்டு கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் தேர்வு வரும் நவம்பர் 25 ஆம் தேதி சுபாங் டோசர்ஸ் விடுதியில் நடைபெறுகிறது.
இம்முறை தேர்தல் ஆண்டு என்பதால் நடப்பு துணை தலைவர் கிருஷ்ணன் மற்றும் டாக்டர் சின்னையா அழகன் அணி தேர்தலில் போட்டியிடுகிறது.
அண்மையில் தமது பிறந்த நாளை கொண்டாடிய டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் அவர்களை இன்று மரியாதை நிமித்தமாக சந்தித்த கிருஷ்ணன் அணியினர் பொன்னாடை போர்த்தி மாலை அணிவித்து சிறப்பு செய்தனர்.
பின்னர் ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த தேர்தலில் போட்டியிடும் இரு அணிகளும் எனது நீண்ட கால நண்பர்கள்.
ஆகவே அனைவரும்
இணைந்து செயல்படுங்கள் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் கேட்டுக் கொண்டார்.
பிரிமாஸ் தொடர்ந்து
அனைவரும் சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதுதான் என் வேண்டுகோள்.
ஒரே குழுவாக ஒற்றுமையாக இருந்து செயல்பட வேண்டும். வெற்றிக்கரமாக பணியாற்ற வேண்டும் என்று லோட்டஸ் குழுமத் தலைவர் டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் கேட்டுக் கொண்டார்.
மலேசிய இந்திய உணவக உரிபையாளர்கள் சங்கத்தின் தோற்றுநருமான டான்ஸ்ரீ ரெனா துரைசிங்கம் மேலும் கூறுகையில், அனைவரும் சிறப்பாகச் செயல்பட வேண்டும்.
சங்கத் தேர்தலில் போட்டகயிடுபவர்கள் அனைவரும் என🙏 நண்பர்கள் என்று அவர் சுருக்கமாக தெரிவித்தார்.

