
கோல லங்காட், நவ. 23–
கோல லங்காட் நாடாளுமன்ற ஒருங்கிணைப்பாளர் மற்றும் மோரிப் சட்டமன்றத் தொகுதி ஒருங்கிணைப்பாளர் ஆகியோர் இணைந்து, மோரிப் இந்திய சமூகத் தலைவரின் ஒத்துழைப்புடன் ஏற்பாடு செய்த ‘தீபாவளி இசை இரவு 2026’ நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்றது.
வண்ணமயமாக நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் 1,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்து கொண்டு விழாவைச் சிறப்பித்தனர். பல்வேறு இனங்களைச் சேர்ந்த மக்களின் பங்கேற்பு, ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் வெளிப்படுத்தும் வகையில் அமைந்தது.
தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடுவதுடன், மக்களிடையே நல்லுறவை வலுப்படுத்தவும், பரஸ்பர புரிந்துணர்வை வளர்க்கவும் இந்நிகழ்ச்சி ஒரு தளமாக அமைந்ததாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

“இருளை அகற்றும் ஒளியாகவும், தீமையை வெல்லும் நன்மையாகவும் விளங்கும் தீபாவளி, சிறந்த வாழ்க்கைக்கான நம்பிக்கையையும் விதைக்கிறது. இந்த உணர்வுடன் சமூக ஒற்றுமையை அனைவரும் பேணிக் காக்க வேண்டும்” என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
நிகழ்ச்சி வெற்றிகரமாக நடைபெற ஒத்துழைப்பு, ஆதரவு வழங்கிய அனைவருக்கும், தன்னார்வலர்களுக்கும் ஏற்பாட்டாளர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

