
வடகிழக்கு பருவமழையைத் தொடர்ந்து வெள்ள அபாயத்தை எதிர்கொள்ள, சமூகத்தின் நலனுக்காக அனைத்து தரப்பினரும் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று மாட்சிமை தங்கிய மாமன்னர் Sultan Abdullah, உத்தரவு பிறப்பித்துள்ளார்.
வெள்ளத்தின் பாதிப்புகளை குறைப்பதில் மட்டும் அல்லாமல், திட்டமிட்டு, உடனடி மற்றும் பயனுள்ள வகையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்படுவதை உறுதி செய்வதற்கான வழிமுறையை வகுக்க வேண்டும்.
எதிர்காலத்தில் ஏற்படப்போகும் காலநிலை மாற்றத்தின் நிகழ்வை எதிர்கொள்ள எனது மக்கள் அனைவரும் நேர்த்தியாகவும், தயார்
படுத்திக்கொள்ளவும் நான் நினைவூட்ட விரும்புகிறேன் என்றார் அவர்.
இவ்வாண்டு இறுதியில் நாட்டில் கனமழை மற்றும் பெரும் வெள்ள அபாயம் உள்ளது என்று மலேசிய வானிலை இலாகா முன்கூட்டியே எச்சரித்துள்ளது.
கடந்தாண்டு இறுதியில் நாட்டில் ஏற்பட்ட அடைமழையால் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது.
இதனால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

