
மறுவாழ்வு திட்டத்தின் கீழ்
நாட்டில் உள்ள முதலாளிகள் தங்களிடம் காலியாக உள்ள இடங்களில் கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளை வேலைக்கு அமர்த்தி கொள்ள முன் வர வேண்டும் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் கேட்டுக் கொண்டுள்ளார்.
கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முதலாளிகள் முன் வர வேண்டும்.
நாம் ஒருபோதும் அவர்களை ஒதுக்கி விடக்கூடாது. நாம் அவர்களை அரவணைத்து வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர வேண்டும்.
அந்த வகையில் கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை வழங்க முன் வந்திருக்கும் சொக்சோ சமூக நல பாதுகாப்பு நிறுவனத்தை பாராட்டுவதாக அவர் சொன்னார்.
நாட்டில் தொழிலாளர்கள் பற்றாக்குறை பிரச்சனைக்கு தீர்வு காண இதுபோன்ற நடவடிக்கைகளில் முதலாளிகள் களம் இறங்க வேண்டும்.
அந்நிய தொழிலாளர்களை சார்ந்திருப்பதை குறைக்க கைதிகளுக்கும் வேலை வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் என்றார் அவர்.
கைதிகள் மற்றும் முன்னாள் கைதிகளுக்கு தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தித் தரும் வகையில் மனித வள அமைச்சர் சிவகுமார் தலைமையில் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.

