
நாளை சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் அனைத்து மலேசிய இந்தியர்களுக்கு இனிய நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்வதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த ஆண்டில் நடப்பவை எல்லாம் நல்லவையாக அமைந்து சிறப்புடன் வாழ சித்தரை புத்தாண்டு வழி வகுக்கட்டும்.
பல்லின மக்கள் வாழும் மலேசியத் திருநாட்டில் நாம் சகோதரத்துவத்தை தொடர்ந்து பேணி காப்போம்.
ஒருவரை ஒருவர் மதித்து, விட்டுக் கொடுக்கும் மான்புடன் அன்பை வளர்ப்போம்.
இனிமையான நினைவுகளோடு இந்த ஆண்டை வெற்றிகரமாக கடப்போம்.
இந்நாட்டில் இந்திய சமுதாயம் கல்வி – பொருளாதாரம் உட்பட அனைத்து துறைகளிலும் பீடு நடை போட வாழ்த்துவோம்.
சித்திரை புத்தாண்டை கொண்டாடி மகிழும் அனைவருக்கும் மீண்டும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

