

மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் டிரா மலேசிய இயக்கத்தின் தலைவர் சரவணன் ஆகியோர் மேற்கொண்ட முயற்சியால் பச்சிளம் குழந்தை நவிஸ்கா நவினுக்கு பிறப்பு பத்திரம் கிடைத்துள்ளது.
நவிஸ்கா தாயார் கெத்ரினா மலேசியாவில் பிறந்தும் அவர் குடியுரிமை பெற தவறிவிட்டார்.
நவிஸ்காவின் தந்தை நவின் மலேசிய பிரஜை ஆவார். இதன் மூலம் இவர்களின் திருமணம் தேசிய பதிவு இலாகாவில் முறைப்படி பதிவு செய்யப்பட்டது.
தந்தை நவின் மலேசிய பிரஜை என்பதால் மகள் நவிஸ்காவுக்கு பிறப்பு பத்திரம் கிடைக்க பேருதவி புரிந்துள்ளது.
இப்போது பச்சிளம் குழந்தை நவிஸ்கா நவினுக்கு முறைப்படி பிறப்பு பத்திரம் கிடைத்திருப்பதால் அவர் வருங்காலத்தில் எவ்வித தடையும் இன்றி கல்வி கற்கலாம்.

