டெலிவரி நிறுவனத்தால் ரைடர் சுரண்டல் குறித்து விசாரணை நடத்த மனிதவள அமைச்சர் சிவகுமார் அதிரடி உத்தரவு!

கோலாலம்பூர். ஏப்ரல் 12-
டெலிவரி எனப்படும் உணவு விநியோகப் பணியாளர்களின் சம்பள பிரச்சினை குறித்து டெலிவரி நிறுவனத்திற்கு எதிராக விசாரணை நடத்தும்படி மனிதவள அமைச்சு வ சிவகுமார் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலை செய்யும் பணியாளருக்கு உரிய சம்பளம் உரிய தேதியில் வழங்கப்பட வேண்டும்.

அப்படி வழங்கப்படாத பட்சத்தில் அது குறித்து நிறுவனங்களுக்கு எதிராக தகுந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.

அதன் அடிப்படையில் ரைடராக பணி புரிந்து வரும் தொழிலாளர் ஒருவருக்கு நிறுவனம் ஒன்று முறையான சம்பளம் வழங்கவில்லை என முறையிட்டுள்ளார்.

இது குறித்து உரிய விசாரணைகளை நடத்த வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளேன்.

விசாரணைக்கு பின் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமைச்சர் சிவகுமார் உறுதியளித்தார்.

ரைடர் தொழிலை செய்யும் முகமட் சைஃபுடினுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனம் 800 வெள்ளியை சம்பளமாக வழங்கியிருக்க வேண்டும்.

ஆனால், அந்நிறுவனம் 500 வெள்ளியை மட்டுமே வழங்கியுள்ளது. இதனால் அதிருப்தியடைந்த அவர் சமூக வலைத்தளங்களில் தனது மனக் குமுறலை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles