
மனிதவள அமைச்சின் ஏற்பாட்டில் சித்திரை புத்தாண்டை முன்னிட்டு மனித வள அமைச்சர் வ சிவகுமாருடன் அரசு சார்பற்ற இயக்கங்களின் சந்திப்பு ஏப்ரல் 15 ஆம் தேதி சனிக்கிழமை மாலை 4.30 முதல் மாலை 6.30 மணிவரை கோலாலம்பூர் பிரிக்பீல்ட்ஸ் Menara Kembar Bank Rakyat Dewan Tun Abdul Razak மண்டபத்தில் மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
மனிதவள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி இந்த புத்தாண்டு விழாவை ஏற்பாடு செய்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சுமார் 600க்கும் மேற்பட்ட அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் கலந்து கொள்ளும் இந்த விழாவில் மனித வள அமைச்சரின் உரையும் இடம் பெறுகிறது.
ஒரு இயக்கத்தில் இருந்து இரண்டு பொறுப்பாளர்கள் மட்டுமே கலந்து கொள்ள வாய்ப்பு வழங்கப்படுகிறது என்பதை அனைவரும் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மகேஸ்வரி கேட்டுக் கொண்டார்.
இந்த சித்திரை புத்தாண்டு விழாவில் கலந்து கொள்ள விரும்பும் அரசு சார்பற்ற இயக்கங்களின் பொறுப்பாளர்கள் 012-3922947 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

