உயில் எழுதும் முக்கியத்துவம் மீதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வு!ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஏற்பாடு

காஜாங், ஏப்.12
பொது மக்களிடையே உயில் எழுதும் முக்கியத்துவத்தை ஏற்படுத்தும் வகையில் ‘உங்கள் உயில் உங்கள் கையில்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
அண்மையில் . தேசிய வகை காஜாங் தமிழ்ப்பள்ளியில் நடைபெற்ற இக்கருத்தரங்கை ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி மற்றும் மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபா ஏற்பாடு செய்தது.

இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் சுமார் 150 பேர் கலந்துகொண்டனர்.இந்தக் கருத்தரங்கை மலேசிய பிரபல பேச்சாளரும் வழக்கறிஞருமான பாண்டிதுரை செவ்வனே வழிநடத்தினார்.

ஒருவர் வாழும் காலத்தில் சேர்த்து வைக்கும் அழியக்கூடிய மற்றும் அழியா சொத்துகளுக்கு உயில் எழுதும் அவசியத்தை மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் இக்கருத்தரங்கு அமைந்தது.

இக்கருத்தரங்கில் ஏன்,எதற்கு,எப்பொழுது உயில் எழுத வேண்டும் என்பதை வழக்கறிஞர் பாண்டிதுரை மிகவும் எளிமையாக மக்களுக்கு விளக்கினார்.

இந்தியர்களில் பெரும்பாலோர் உயில் எழுதும் அவசியம் குறித்து தெரியாமல் இருப்பதை அவர் சுட்டிக் காட்டினார்.

இதனைக் கருத்தில் தாங்கள் இக்கருத்தரங்கை ஏற்பாடு செய்ததாகவும் இனி வரும் காலங்களில் மேலும் இது போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் ஸ்குவாத்ஸ் குலோபல் எகாடமி மற்றும் மலேசிய ஸ்ரீ குழந்தை வடிவேலன் திருப்பணி சபாவின் ஸ்தாபகரும் தேசிய தலைவருமான கலைமாமனி டாக்டர் பிரேமக்கண்ணன் விவரித்தார்.

அதே சமயம், இந்த விழிப்புணர்வு கருத்தரங்கை நடத்த இடத்தைக் கொடுத்த காஜாங் தமிழ்ப்பள்ளியின் தலைமையாசிரியரி திருமதி விஜயலெட்சுமிக்கு தாங்கள் நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாகவும் அவர் சொன்னார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles