பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் ஸ்கோட் ரோட் கந்தசாமி கோவிலுக்கு மனித வள அமைச்சர் சிவகுமார் சிறப்பு வருகை

நாட்டில் புகழ்பெற்ற திருத்தலங்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் ஜாலான் ஸ்கோட் ரோட் கந்தசாமி கோவில் கடந்த 27.-3.2023 ஆம் தேதி ஆகம முறைப்படி மகா கும்பாபிஷேகம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து இப்போது 48 நாள் மண்டல அபிஷேகம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில் மனித வள அமைச்சர் வ சிவகுமார் நேற்று கந்தசாமி கோவிலுக்கு சிறப்பு வருகை புரிந்தார்.

கந்தசாமி கோவில் தலைவர் க. அருள் ஜோதி தலைமையிலான கோவில் நிர்வாக குழுவினர் அமைச்சர் சிவகுமாரை வரவேற்றனர்.

பின்னர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு பிரார்த்தனையிலும் அவர் கலந்து கொண்டார்.

மனிதவள அமைச்சரின் தனிச் செயலாளர் மகேஸ்வரி, தமிழ் பத்திரிகை செயலாளர் செ.வே. முத்தமிழ் மன்னன், சொக்சோ நிறுவனத்தின் இயக்குநர் டி கண்ணன், ஹராப்பான் மலேசிய கலை கலாச்சார சமூக நல இயக்கத்தின் தலைவர் டத்தோ டாக்டர் சுகுமாரன் கன்னி- டத்தின் ஷீலா தம்பதியர் , மலேசிய இந்தியர் கால்பந்து சங்கத்தின் தலைவர் அன்பா, ரவாங் பண்டார் கன்ட்ரி ஹோம்ஸ் அருள்மிகு ஸ்ரீ சுப்ரமணியர் கோவில் தலைவர் தனராஜ் குப்புசாமி ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles