
சென்னை மே 8-
திமுக கூட்டணியில் இடம் பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழுவின் ஆலோசனைக் கூட்டம் அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் மாநில செயலாளர் சண்முகம் தலைமையில் 13 பேர் கலந்து கொண்டனர்.
இந்தக் கூட்டத்தில் தவெக ஆதரவு கேட்டது குறித்து விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.
அதேபோல இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் வீரபாண்டியன் தலைமையில் சூளைமேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் அக்கட்சியின் செயற்குழு கூட்டம் தொடங்கியது.
இந்தக் கூட்டத்திலும் தவெக ஆதரவு கேட்டது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது
.இந்நிலையில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் ஆதரவு அளித்துள்ளது.
ஆட்சியில் பங்கேற்காமல் வெளியில் இருந்து ஆதரவு அளிக்க இந்திய கம்யூனிஸ்ட் முடிவு செய்துள்ளது. 2 எம்.எல்.ஏ.க்கள் வைத்துள்ள இந்திய கம்யூ. ஆதரவு தந்துள்ளதால் தவெக ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 114ஆக உயர்ந்துள்ளது.

