ஈப்போ ரயில்வே ஸ்டேஷன் மகா கணபதி ஆலய திருப்பணிக்குமனிதவள அமைச்சர் வ சிவகுமார் ஒரு லட்சம் வெள்ளி மானியம்

பேராக் மாநிலத்தில் 104 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஈப்போ ரயில்வே ஸ்டேஷன் மகா கணபதி ஆலயம் இப்போது 15 லட்சம் வெள்ளி செலவில் திருப்பணி செய்யப்பட்டு வருகிறது.

வரும் ஜூன் மாதம் 25 ஆம் தேதி ஆலய மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில் ஈப்போ ரயில்வே ஸ்டேஷன் மகா கணபதி ஆலயத் தலைவர் டத்தோ நாராயணன், காப்பாளர் டத்தோஸ்ரீ நவரத்தினம் மற்றும் ஆலய செயலாளர் எஸ். விக்னேஸ்வரன் ஆகியோர் மரியாதை நிமித்தமாக மனிதவள அமைச்சர் சிவகுமாரை சந்தித்தனர்.

இந்த சந்திப்பின் போது ஈப்போ ரயில்வே ஸ்டேஷன் மகா கணபதி ஆலயத் திருப்பணிக்கு ஒரு லட்சம் வெள்ளியை வழங்குவதாக மனித வள அமைச்சர் சிவகுமார் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடன் சந்திப்பை நடத்திய மனித வள அமைச்சர் சிவகுமார் மின்னல் வேகத்தில் ஆலய திருப்பணிக்கு ஒரு லட்சம் வெள்ளியை அங்கீகரித்ததை எண்ணி பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது என்று ஆலயத் தலைவர் டத்தோ நாராயணன் தெரிவித்தார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles