


வேலைக்காக அழைத்து வரப்பட்டு
அநீதி இழைக்கப்பட்டதாக கூறப்படும்
327 வங்களாதேச தொழிலாளர்கள் இன்று நீலாயில் மீட்கப்பட்டுள்ளனர் என்று மனிதவள அமைச்சர் வி. சிவக்குமார் தெரிவித்தார்.
வங்காளதேச தூதரகத்தின் புகாரின் அடிப்படையில் மனிதவள அமைச்சின் ஆல்பள இலாகா நீலாயில் அதிரடி சோதனையை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
மூன்று மாடிகளை கொண்ட மூன்று கட்டடத்தில் 9 அறைகளில் இவர்கள் அடைத்து வைக்கப்பட்டனர்.
ஒரு அறையில் 60 பேர் வரை தங்கியுள்ளனர். மின்சாரம் கூட இல்லாமல் மிகப் பெரிய அவலங்களுக்கு மத்தியில் அவர்கள் கடந்த 40 நாட்களுக்கும் மேலாக தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது அதிரடி நடவடிக்கையில் தெரிய வந்தது.
அவர்களுக்கு எந்த ஒரு வேலை வாய்ப்பும் ஏற்படுத்தித் தர அவர்களை கொண்டு வந்த நிறுவனம் தவறிவிட்டது.
இவர்கள் அனைவரும் தற்போது மீட்கப்பட்டு தற்காலிகமாக வேறு இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று அவர் சொன்னார்.

