16 ஆண்டுகால போராட்டத்திற்கு பின்னர்ஆன் கேப்ரியல்என்ற மாணவிக்குகுடியுரிமை கிடைத்தது

பெற்றோரால் கைவிடப்பட்ட ஆன் கேப்ரியல் என்ற 16 வயது மாணவிக்கு மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் மற்றும் டிரா மலேசிய இயக்கத்தின் சார்பில் இப்போது குடியுரிமை கிடைக்கப் பெற்றுள்ளது.

ஆன் கேப்ரியல் கைக்குழந்தையாக இருந்தபோது அவரின் தாயார் எங்கே போனார் என்று தெரியவில்லை.

அந்நேரத்தில் தந்தையும் காலமானதால் ஆன் கேப்ரியல் பெற்றோரை இழந்தார்.

இவர் பிறந்தற்கான எந்தெந்தவொரு பிறப்பு பத்திரம் மற்றும் தஸ்தா வேஜூகளும் இல்லை.

கைக்குழந்தை முதல் ஆன் கேப்ரியலை. தாமான் அம்பாங் புக்கிட் தெரத்தாயைச் சேர்ந்த ஆரோக்கியசாமி – அன்னாம்மாள் தம்பதியர் எடுத்து வளர்ந்து வந்தனர்.

இவருக்கு குடியுரிமை பெற்றுத் தர ஆரோக்கியசாமி டிரா மலேசிய இயக்கத்தின் தலைவர் சரவணனின் உதவியை நாடினார்.

பின்னர் மனித வள அமைச்சர் சிவகுமாரின் உதவியும் நாடப்பட்டது.

இப்போது இறுதியாக ஆன் கேப்ரியல் (வயது 16) என்ற மாணவிக்கு மலேசிய குடியுரிமை கிடைத்துள்ளது.

Ampang Taman saraya இடைநிலைப்பள்ளியில் பயிலும் தமக்கு மலேசிய குடியுரிமை கிடைக்க பேருதவி புரிந்த மனித வள அமைச்சர் சிவகுமார் மற்றும் டிரா மலேசிய சரவணன் ஆகியோருக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles