

பினாங்கு, ஏப்ரல் 10
இந்திய பாரம்பரிய தொழில் நிறுவனங்கள் எதிர்நோக்கும் அந்நிய தொழிலாளர் பிரச்சனைக்கு விரைந்து தீர்வு காணப்படும் . என்று மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் மீண்டும் உறுதியளித்தார்.
குறிப்பாக இந்தியத் தொழில் துறைகளான முடி திருத்தும் நிலையங்கள், ,நகைக் கடைகள் மற்றும் ஜவுளிக் கடைகளுக்கான அந்நிய தொழிலாளர் பற்றாக்குறை பிரச்சனைக்கு கண்டிப்பாக தீர்வு தீர்வு காணப்படும்
பினாங்கு பிறை,ஜாலான் பாரு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் ஏற்பாட்டில் நடந பினாங்கு மாநில சமூகத் தலைவர்களுடனான சந்திப்பு கூட்டத்தில் கலந்துகொண்டபோது மனிதவள அமைச்சர் வி.சிவகுமார் இந்த அறிவிப்பை வெளியிட்டார்.
அந்த மூன்று தொழில் துறைக்கான அந்நிய தொழிலாளர்கள் தருவிப்பதை அரசாங்கம் நிறுத்தி வைத்துள்ளது
இதனை மீண்டும் திறந்து விட எல்லா முயற்சிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இதற்கு சம்பந்தபட்ட உள்துறை அமைச்சு மற்றும் உள்நாட்டு வாணிப வாழ்க்கை செலவின அமைச்சர்களின் ஒப்புதலும் பெறப்பட்டுள்ளது
இதனை அமைச்சரவை கூட்டத்திற்கு கொண்டு சென்று அங்கிகாரம் பெறப்பட்டதும் அந்நிய தொழிலாளர்களைத் தருவிப்பது நடப்புக்கு வருமென அமைச்சர் வ.சிவகுமார் அறிவித்தார்.
பிறை ஜாலான் பாரு முனீஸ்வரர் ஆலய அறங்காவலர் டத்தோஸ்ரீ ந. கோபாலகிருஷ்ணன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பாகான் டாலாம் சட்டமன்ற உறுப்பினர் சதீஷ் முனியாண்டி, செபெராங் பிறை கவுன்சிலர் டேவிட் மார்ஷல், பிறை ஜாலான் மூனீஸ்வரர் ஆலயத் தலைவர் மேஜர் சேகரன், பினாங்கு குற்றத்தடுப்பு அறவாரியத்தின் துணை தலைவர் டத்தோஸ்ரீ புலேந்திரன், மலேசிய உலோகப் பொருள் மறுசுழற்சி சங்கத்தின் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பி.கிருஷ்ணமூர்த்தி மற்றும் மலேசிய இந்தியர் உணவக உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சுரேஷ் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

