
நாட்டில் புகழ்பெற்ற கோவில்களில் ஒன்றாக விளங்கி கொண்டிருக்கும் பிரிக்பீல்ட்ஸ் ஸ்ரீ சக்தி கற்பக விநாயகர் கோயிலில் வரும் மே 5 ஆம் தேதி 16 ஆம் ஆண்டு ஸ்ரீ அகத்தியர் சித்தர் குருபூஜை விழா மிகப்பெரிய அளவில் நடைபெறுகிறது.
ஸ்ரீ அகத்தியர் குருபூஜை விழா ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ். பக்தவத்சலம் தலைமையில் மே 5 ஆம் தேதி காலை 7.00 மணி முதல் பிற்பகல் 12.00 மணி வரை நடைபெறும் இந்த விழாவில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கலந்து சிறப்பிக்கவுள்ளனர்.
ஸ்ரீ அகத்தியர் பெருமானை போற்றி புகழும் ஆதாரனை பாடல்களை அவரின் சீடர்கள் பாடி பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்துவார்கள்.
சிறப்பு பூசைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமும் அன்னதானமும் வழங்கப்படும் என்று ஏற்பாட்டுக் குழு தலைவர் எஸ் பக்தவச்சலம் தெரிவித்தார்.
மே 5 ஆம் தேதி நடைபெறும் ஸ்ரீ அகத்தியர் குருபூஜை விழாவில் பக்தர்கள் பெரும் அளவில் கலந்து கொள்ளும்படி பக்தவச்சலம் கேட்டுக் கொள்கிறார்.

