புத்தர் பெருமானின் மனித நேயத்தை தொடர்ந்து கடைப்பிடிப்போம்!மனிதவள அமைச்சர் வ. சிவகுமார் விசாக தின வாழ்த்துச் செய்தி

புத்ரா ஜெயா மே 3-
உலக மக்கள் அனைவரும் எப்போதும் மற்றவர்களுக்கு உதவ வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில் அரச வாழ்க்கையில் இருந்து விடுபட்டு துறவம் பூண்ட புத்தர் பெருமான் விட்டுச் சென்ற மனிதநேயத்தை தொடர்ந்து கடைப்பிடிப்போம் என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது விசாக தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

உலகின் எல்லா மதங்களும் நல்லொழுக்கங்களையும்நற்பண்புகளையும் மனிதர்களுக்கு போதிப்பவை.

அந்த மதங்களைத் தோற்றுவித்த மகான்களும் சமூகத்தை நல்வழிப்படுத்தும் நல்ல பல தத்துவங்களையும், கருத்துகளையும் நமக்கு போதித்து தந்துள்ளனர்.

அந்த வரிசையில் புத்த மதம் தனித்தன்மை வாய்ந்தது.

அமைதி, மனித நேயம், உயிர்களிடத்தில் அன்பு வைத்தல், மன சாந்திக்கான தியானம், போன்ற பல நல்ல கருத்துகளை நமக்குப் போதித்த தந்தவர் புத்தர் பெருமான் ஆவார்.

இவ்வேளையில் மலேசியர்கள் அனைவரும் அமைதிக்கும் ஒருமைப்பாட்டு உணர்வுக்கும் உரிய நாளாக இந்த நந்நாளைக் கொண்டாடி மகிழும்படி மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தமது வாழ்த்து செய்தியில் கேட்டுக் கொண்டுள்ளார்

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles