பூப்பந்துப் போட்டியில் இந்தியர்கள் அனைத்துலக ரீதியில் மிளிர வேண்டும் -சுங்கை சிப்புட் எஸ் . கேசவன் வேண்டுகோள்

ஈப்போ, மே.3:
அடுத்த ஆண்டு முதல் பூப்பந்து விளையாட்டு போட்டி ” இந்திய பேட்மிண்டன் சாம்பியன் ஷிப்” பெயரில் நடைபெறுவதற்கு தாம் முழு ஒத்துழைப்பும், ஆதரவும் வழங்குவதாக பேராக் இந்திய பூப்பந்து போட்டியின் நிறைவு விழாவில் கலந்துக்கொண்டு, வெற்றியாளர்களுக்கு பரிசுகள் எடுத்து வழங்கிய சுங்கை சிப்புட் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ். கேசவன் தெரிவித்தார்.

கடந்த 44 வருடங்களாக இந்த பூப்பந்து போட்டியை வழி நடத்தி வரும் பேராக் இந்திய பூப்பந்து சங்கத்திற்கு பாராட்டுக்களை தெரிவித்துக் கொண்டார்.

இவ்விளையாட்டு சங்கத்தினர் வரலாற்று பதிவை செய்து வருகின்றனர்.
அதுமட்டுமின்றி, இச்சங்கத்தின் சேவை மற்றும் தேசிய, அனைத்துலக ரீதியில் இந்திய பூப்பந்து விளையாட்டாளர்களை உருவாக்கி வருகின்றனர் என்பது மிகவும் பாராட்டப்பட வேண்டிய விசயமாகும்.

பேராக் மாநில பேட்மிண்டன் சங்கத்தின் தலைவர் லோகநாதன் தலைமையில் 25 செயலவை உறுப்பினர் திறம்பட செயல்பட்டு வருகின்றனர்.

சுங்கை சிப்புட் நாடாளுமன்றத் தொகுதி சார்பில் இச்சங்கத்திற்கு நிதியுதவி வழங்கப்படும் என்று கேசவன் குறிப்பிட்டார்.

மொத்தம் 22 பிரிவில் 660 இந்திய பூப்பந்து விளையாட்டாளர்கள் கலந்துக் கொண்டு தங்களது திறமையை வெளிப்படுத்தினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles