ஐந்து மணி நேர விசாரணைக்குப் பிறகு சமூக ஆர்வலர்
Jay Jay Denis விடுவிக்கப்பட்டார்

மலாக்கா மாநில ஆளுநர் குறித்து சமூக வலைத்தளங்களில் கருத்துகளை பதிவேற்றம் செய்தது தொடர்பில் சமூக ஆர்வலர் ஜெ. ஜெ. டெனிஸ் நேற்று கைது செய்யப்பட்டார்.

மலாக்கா அலோர் காஜா காவல் நிலையத்தில் ஐந்து மணி நேரம் தடுத்து வைக்கப்பட்ட பின்னர் அவர் விடுவிக்கப்பட்டார்.

குற்றவியல் சட்டத்தின் பிரிவு 505 (B) மற்றும் தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா சட்டத்தின் பிரிவு 233 ஆகியவற்றின் கீழ், தகவல் தொடர்பு நெட்வொர்க்குகளை தவறாகப் பயன்படுத்தியதற்காக இவர் மீது விசாரணை நடத்தப்பட்டது.

“போலீசார் எனது வாக்குமூலத்தை எடுத்துக்கொண்டு, டி4 புக்கிட் அமானின் கீழ் புலனாய்வு அறிக்கையைத் தொடர்ந்தனர்.

“நான் பிறந்ததிலிருந்து அவர்கள் எல்லாவற்றையும் தெரிந்து கொள்ள விரும்புகிறார்கள் என்று அவர் சொன்னார்.

இதனிடையே ஜெ ஜெ டெனிஸ் சார்பில் பிரபல வழக்கறிஞர் டத்தோ அம்பிகா சீனிவாசன் ஆஜராகினர்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles