மித்ரா நிதியை மோசடி செய்தவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? பத்து காஜா எம்பி சிவகுமார் கேள்வி

ஏழை இந்திய சமுதாயத்திற்கு ஒதுக்கப்பட்ட மித்ரா நிதியில் பயங்கர மோசடி நிகழ்ந்துள்ளது.

மித்ர நிதியை மோசடி செய்தவர்களை ஊழல் தடுப்பு ஆணையம் கைது செய்து விசாரணை செய்தது.

கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிராக இதுவரை என்ன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. எத்தனை பேர் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறார்கள் போன்ற விவரங்கள் தெரியவில்லை.

மித்ரா நிதியை மோசடி செய்த சுறா மீன்களை இன்னும் விட்டு வைத்திருப்பது ஏன்.

இந்த மித்ரா நிதி ஊழல் தொடர்பில் எஸ்.பி.ஆர்.ஏம். மேற்கொண்ட விசாரணை குறித்து பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப் பகிரங்கமாக அறிவிக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

மித்ர நிதி மோசடி தொடர்பில் பலமுறை நாடாளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதுவரை சரியான பதில்கள் வழங்கப்படவில்லை என்று அவர் சுட்டிக் காட்டினார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles