

கடந்த ஞாயிற்றுக்கிழமை மே 14 ஆம் தேதி போர்ட் டிக்சன் வட்டாரத்தில் உள்ள ஆஞ்சநேயர் ஆலயத்தின் வருடாந்திர பாலாபிஷேக திருவிழா மிக சிறப்பாக நடைபெற்றது.
நூற்றுக்கணக்கான பக்தர்கள் பால் குடங்களை ஏந்தி பகவான் ஸ்ரீ ஆஞ்சநேயருக்கு பால் அபிஷேகம் செய்தனர் .
சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
பின்னர் ஆலய வளாகத்தில் சமய கலாச்சார நடன நிகழ்ச்சியும் நடைபெற்றது.
இரவு நேரத்தில் அன்னையர் தின சிறப்பு நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
கவிமாறன் அறிவிப்பில் சமய கலாச்சார நிகழ்வு மற்றும் அன்னையர் தினம் மிகவும் விமரிசையாக நடைபெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

