அன்னை மங்கலத்தின் மறைவு ஈடு செய்ய முடியாத பேரிழப்பு!மனிதவள அமைச்சர் சிவகுமார் இரங்கல்

ஜெனிவா, ஜூன் 11-
எழை எளிய மற்றும் நளிந்த மக்களுக்காக தன்னலம் கருதாமல் சேவையாற்றிய அன்னை மங்கலம் மறைவு செய்தி பெரும் வேதனையை அளிக்கிறது என்று மனிதவள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

ஜெனிவாவில் நடைபெறும் மனித உரிமை – ஜனநாயக உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று காலையில் பயணம் மேற்கொண்டு இரவு நேரத்தில் சுவிட்சர்லாந்து வந்து சேர்ந்தபோது அன்னை மங்கலத்தின் மறைவு செய்தி என் காதுக்கு எட்டியபோது பெரும் வேதனையை அடைந்தேன்

சுத்த சமாஜம் எனப்படும் தெய்வீக வாழ்க்கைச் சங்கத்தின் வாழ்நாள் தலைவராக இருந்த அன்னை மங்களனலம் நேற்று தனது 97 வயதில் இறைவனடி சேர்ந்துள்ளார்.

ஏழை எளிய மற்றும் நலிந்த மக்களுக்கு அடைக்கலம் அளித்து பல உதவிகளை செய்து வந்தவர் அன்னை மங்களம் ஆவார்.

அனைத்து இன மக்களின் அன்புக்குரிய ஒரு சமூக சேவையாளராக இவர் விளங்கினார்.

இவரின் மறைவு மிகப்பெரிய பேரிழப்பாகும்.

இவரின் அளப்பரிய சேவைக்காக கடந்த 2010 ஆம் ஆண்டில் மெர்டேக்கா விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

கடந்த 1949 ஆம் ஆண்டு முதல் சுத்த சமாஜம் அறக்கட்டளையை நிறுவி மனிதநேய உதவிகளை செய்து வந்தார்.

மலேசிய வரலாற்றில் அன்னை மங்கலத்தின் புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும் என்று மனிதவள அமைச்சர் சிவகுமார் தமது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles