வேலையின்மை விகிதம் 13.5% குறைந்துள்ளது! புதிய வேலை வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ளுங்கள்! மலேசியர்களுக்கு மனிதவள அமைச்சர் சிவகுமார் வேண்டுகோள்

புத்ரா ஜெயா ஜூன் 25 –
2022 ஆம் ஆண்டின் நான்காம் காலாண்டில் நாட்டில் வேலையின்மை விகிதம் 13.5% குறைந்துள்ளதாக மனிதவள அமைச்சர் வ.சிவகுமார் இன்று அறிவித்தார்.

1 கோடியே 59 லட்சத்து 50,000 பணியாளர்களுக்கு பங்களிப்பு செய்யும் தொழிலாளர்களின் 3.2% அதிகரிப்புடன் இந்த போக்கு வலுப்பெற்றுள்ளது.

“நாம் சரியான பாதையில் செல்கிறோம் என்பதையும், மலேசியர்கள் பல்வேறு வேலை வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்ள முடியும் என்பதையும் இது தெளிவாகக் காட்டுகிறது என்று அவர் சொன்னார்.

மலேசியாவின் பணியாளர்கள் மற்றும் திறமைகள் அதன் மிகப்பெரிய சொத்தாக இருக்கிறது.

சவாலை எதிர்கொள்ள நாட்டிற்கு உதவுவதில் மனிதவள அமைச்சின் முயற்சியில் நான் உறுதியாக உள்ளேன்.

மலேசியர்கள் மிகவும் அதிர்ஷ்டசாலிகள் என்பதை இந்த விகிதம் தெளிவாகக் காட்டுகிறது.

ஏனெனில் உருவாக்கப்படும் புதிய வேலை வாய்ப்புகளை அவர்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும்.

உலக அரங்கில் மலேசியர்கள் தொடர்ந்து போட்டியிடுவதை உறுதிசெய்ய
பெருகிய முறையில், மூலதன மேம்பாட்டு முயற்சிகளை நாம் தொடர்ந்து இயக்க வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles